bluehost

Wednesday, January 30, 2008

வலி

காலில் தைத்த
முள்ளை
எடுத்து விட்டேன்
வீசி
எறிய முடியவில்லை
வலியை

தயக்கம்

மஞ்சள் வெயில் மாலை பொழுது,
எதிர் வர கண்டு புன்னகைத்த போதும்,

கருத்த வானம் திடீரென மழை பொழிய
தெருவோர கடையின் கீழ் தஞசம்
அடைந்த போதும்;

பசுமை மரங்கள் அடர்ந்த
தனிமை சாலையில் ஒன்றாக
நடை பயின்ற போதும்;

நீல வானில் அமிழ்ந்து மாடியில் அமர்ந்திருக்க
இரவல் வாங்கிய புத்தகத்தை நீ
திரும்ப தர வந்தபோதும்;

பச்சை கிளியாய் உன் பெயரை மனம் உச்சரிக்க
தனியாக நூலக அறையில் படித்துக்கொண்டிருந்தபொழுது
எதிரே வந்து நீ அமர்ந்த போதும்;

சொல்லிவிடத்தான் துடித்தேன்;
ஏனோ வார்த்தைகளின்
வாயோரம் வழிந்தது
மௌனம்....

கோழி

எண்ணக்
குப்பைகளை
கிளறி கிளறி
கவிதை தேடும்
என் மனம்

குட்நைட்

அவள் நேற்று இரவு
"குட்நைட்"
என்றுதான்
சொன்னாள்;
என்னால்தான்
இரவு முழுவதும்
தூங்கமுடியவில்லை.

வேண்டுவன

புத்தகத்தை
புரட்டாத தென்றல்;
காலாவதியான
பௌர்ணமி நிலவு;
சிதறிய விண்மீன்கள்;
தூரத்து மரங்கள்;
கண்ணாடி மௌனம்;
கற்புள்ள(genuine) தனிமை;
சில கவிதை
புத்தகங்கள்
கொஞ்சம் சோகம்
இது போதும் எனக்கு

Tuesday, January 29, 2008

தவம்

வாகனகங்கள் அவசரமாய்
விரைந்து செல்லும்;
காற்றில் இருள்
மெதுவாக பரவும்;
தெரு விளக்கு கம்பம்களில்
ஒளிப்"பூ" மெல்ல பூக்கும்;
மெல்லிய குளிர் காற்று
என்னை தீண்டி போகும்;
அவசரமாய் உலகம்
என்னை சுற்றி
இயங்கி கொண்டு இருக்கும்;
நான் மட்டும்
பேருந்து நிலைய சுவரில்
சாய்ந்துஒற்றை காலில்
தவம் இருப்பேன்
தேவதை அவள்
கடந்து போகும்
ஒற்றை வினாடிக்காக!